செவ்வாய் கோளில் கிடைக்கும் மாதிரி மண் அமெரிக்காவில் பரபரப்பாக விற்பனை செய்யப்படுகிறது
அமெரிக்காவில் 1500 ரூபாய் கொடுத்தால் செவ்வாய் கிரக மண் கிடைக்கும் என்று விளம்பரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
செவ்வாயில் கோள் குறித்த ஆராய்ச்சிகள் அமெரிக்காவில் தீவிரமடைந்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக மத்திய புளோரிடா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் செவ்வாய் கிரக மணலை விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறார்கள்.இந்த மணல் இந்திய மதிப்பில் ஒரு கிலோ 1500 ரூபாய் ஆகும். அதை வைத்து நமக்கு தேவையான ஆராய்ச்சி செய்யலாம். விதை போட்டு செடி வளர்த்து பார்க்கலாம்.
ஆனால் இந்த மணல் உண்மையான செவ்வாய் கிரக மணல் கிடையாது. ஆனால் செவ்வாய் கோளில் கிடைக்கும் மண்ணுக்கும் இதற்கு ஒரு சதவிகிதம் கூட வித்தியாசம் கிடையாது. அதில் இருக்கும் வேதிப்பொருட்களை வைத்தே இதை உருவாக்கி இருக்கிறார்கள்.
கிட்டத்தட்ட 100க்கும் அதிகமானோர் இப்போதே இந்த மணலுக்கு ஆர்டர் கொடுத்து இருக்கிறார்கள். இப்போதைக்கு இது அமெரிக்காவில் மட்டுமே கிடைக்கும். விரைவில் மற்ற நாடுகளுக்கும் அளிக்கப்படும். இதை இதுவரை ஆர்டர் செய்த பலர் ஆராய்ச்சியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post