புதுக்கோட்டை அருகே அரசுப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினார். விழாவில் பேசிய அவர், காவிரி -குண்டாறு இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்படும் போது புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயம் செழிப்பதுடன், 800 முதல் 900 அடியில் இருக்கும் நிலத்தடி நீர்மட்டம், 200 அடிக்கு உயரும் என்று தெரிவித்தார்.
Discussion about this post