இலங்கையில், பொது இடங்களுக்கு பெண்கள் பர்தா அணிந்து வர மீண்டும் என தடை விதிக்க வேண்டும் என்று அந்த நாட்டு நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது.
இலங்கையில் கடந்த ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி ஈஸ்டர் தினத்தில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதையடுத்து தாக்குல் குறித்து விசாரிக்கவும்,பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆராயவும் நாடாளுமன்றத்தில் சிறப்பு குழு பரிந்துரைத்தது. அக்குழுவின் பரிந்துரைப்படி இலங்கையில் அவசர நிலை அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் பெண்கள் பர்தா அணியவும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் அவசரநிலை விலக்கப்பட்டவுடன் மீண்டும் இயல்பு திரும்பியது. இந்நிலையில் பொது இடங்களில் பெண்கள் பர்தா அணிய தடை விதிக்க வேண்டுமென்று நாடாளுமன்ற குழு மீண்டும் பரிந்துரைத்துள்ளது. மேலும் மதம் மற்றும் இனத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கட்சிகளுக்கான அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
Discussion about this post