சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாளை கொண்டாடுவது குறித்து, தகவல் தொழிநுட்பப் பிரிவின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தகவல் தொழில்நுட்ப பிரிவிரின் மாநில செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், இணை செயலாளர்கள் ராஜ்சத்தியன், பிரசன்னா அழகர்சாமி, முன்னாள் அமைச்சரும், அமைப்புச் செயலாளருமான பொன்னையன் மற்றும், மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
நடத்து முடிந்த தேர்தல்களில் கழக அரசின் சாதனைகளை தமிழகம் முழுவதும் கொண்டு சேர்த்து, வெற்றிக்கு உதவியாக இருந்த தகவல் தொழில்நுட்ப பிரிவினை கழக சட்ட விதியின் கீழ் கொண்டுவந்து அதிகாரப்பூர்வமாக பொதுக்குழு செயற்குழு கூட்டத்தில் அறிவித்த ஒருங்கிணைப்பாளார், இணை ஒருங்கிணைப்பாளர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி நடத்தி கல்வி சார்ந்த நலத்திட்டங்களை மாநிலம் முழுவதும் செயல்படுத்த வேண்டும் என்ற தீர்மானமும் நிறவேற்றப்பட்டது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த தினமான பிப்ரவரி 24 ஆம் தேதியை மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக அறிவித்து, ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு 21 வயது நிறைவடையும் போது அவர்களது வங்கி கணக்கில் 2 லட்சம் ரூபாய் செலுத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
தமிழகம் அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக சிறந்த விளங்குவதற்காக நன்றியும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.
காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலாமாக அறிவித்த முதலமைச்சருக்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
மூன்றாண்டு சாதனைகள் நிறைவடைந்து, நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் முதலமைச்சருக்கும், உறுதுணையாக இருந்த துணை முதமைச்சருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் அதிமுக அரசின் சாதனைகளை சாமனிய மக்களுக்கு கொண்டு சென்று வெற்றியினை முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் உரித்தாக்குவோம் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Discussion about this post