தன்னை பார்க்க வருகிறேன் என்று சொல்லிய காதலி வராததால், ஆத்திரத்தில் போலீஸ் பூத் மீது பெட்ரோல் குண்டை வீசிய இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த வெங்கடேஷ் டெலிவரி பாயாக வேலை செய்து வருகின்றார். இவர் கடந்த 7 வருடமாக ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்த நிலையில் தினமும் குடித்துவிட்டு காதலியிடம் சண்டை போட்டு வந்துள்ளார். இதனால் கோபம் அடைந்த காதலி, இவரை பிரிந்து வேற ஒரு பையனை காதலிக்கப் போவதாக கூறியுள்ளார்.
இதனால் கோபமடைந்த வெங்கடேஷ் காதலி மீது பெட்ரோல் குண்டு வீச முடிவு செய்துள்ளார். இதை அடுத்து, பெட்ரோல் குண்டு செய்வதை, யூடியூப்பில் வீடியோ பார்த்து கற்றுக்கொண்டு பெட்ரோல் குண்டை தயார் செய்துள்ளார். பின்னர், காதலிக்கு போன் செய்து, தேனாம்பேட்டை போலீஸ் பூத் அருகே வா, பேச வேண்டும் என்று அழைத்துள்ளார்.
அதன் படி காத்திருந்த வெங்கடேஷ், நீண்ட நேரமாகியும் தன்னுடய காதலி வராததால் கோபமடைந்து அருகிலிருந்த போலீஸ் பூத்தின் மீது பெட்ரோல் குண்டை தூக்கி வீசி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதை அடுத்து, சிசிடிவி காட்சிகளை வைத்து வெங்கடேஷை கைது செய்து விசாரணை செய்த போது, அவன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது. பின்னர் அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், புழல் சிறையில் அடைத்தனர்.
Discussion about this post