கேளம்பாக்கத்தை அடுத்த சிறுசேரி சிப்காட் வளாகத்தில் உள்ள ஐடி நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்து வந்தவர் பிரபு. இவர் நேற்று பணியில் இருக்கும்போது, 4-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர், பிரபுவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தவறுதலாக கீழே விழுந்து இறந்தாரா? என்னும் கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Discussion about this post