உடுமலை அருகே கோயில் நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி 500 க்கும் மேற்பட்ட மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த சீன்னவீரம்பட்டி கிராமத்தில் உள்ள உச்சையினி மாகாளியம்மன் கோயிலுக்கு சொந்தமான இடத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து, கோயிலுக்கு முன் கழிவறை கட்டி உள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவருக்கும், வட்டாச்சியருக்கும் பொதுமக்கள் பல முறை புகார் கொடுத்துள்ளனர்.
ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள், உடுமலை-திருப்பூர் சாலையில் மறியல் போரட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் கோயில் நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றியதால், பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
Discussion about this post