சிறப்பு வேளாண் மண்டலத்தின் பயன்கள் என்னென்ன, என்பது குறித்து பார்க்கலாம்…
பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக டெல்டா மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால், விவசாய நிலங்கள், விவசாயத்திற்கு மட்டும் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது.
வேளாண்மை சாராத எந்த திட்டங்களையும் அங்கு செயல்படுத்த முடியாது.
விவசாயத்திற்கு தேவையான நீர், மின்சாரம், உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்து விதமான அம்சங்களும் உறுதி செய்யப்படும்.
மேலும், வேளாண் மண்டலத்தில் மண்ணின் தரம் ஆய்வு செய்யப்பட்டு, அதற்கு ஏற்ற வகையில் பயிர் சாகுபடிகள் அறிமுகப்படுத்தி மேம்படுத்தப்படும்.
விவசாயிகளின் வருமானத்தை பெருக்க புதிய பயிர் சாகுபடி திட்டங்கள் வகுக்கப்படுவதுடன், வேளாண் பயிர்களை பாதுகாக்கக்கூடிய வகையில், நவீன ஆராய்ச்சி கூடங்கள் அமைக்கப்படும்.
காலத்திற்கு ஏற்றவாறு பருவநிலை மாற்றங்கள் குறித்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு, அது குறித்த ஆலோசனைகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
மகசூலை பெருக்க விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கப்படுவதுடன், சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, சாகுபடி தொடங்கி சந்தைப்படுத்துதல் வரை கண்காணிக்கப்படும். விவசாயம் சார்ந்த தொழில்களில் இளைஞர்கள் அதிகம் ஈடுபட வழிவகை செய்யப்படும்.
மேலும் ஆண்டு மகசூல்கள் ஆய்வு செய்யப்பட்டு, இயற்கை முறை விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
இந்தியாவின் முதல் சிறப்பு வேளாண் மண்டலம் 2011ம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்திலும், அதனைத் தொடர்ந்து கேரளாவிலும் அமைக்கப்பட்டு விவசாய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக முதலமைச்சர் அறிவித்திருப்பது, அப்பகுதி விவசாயிகளுக்கு பெரும் வரப்பிரசாதம் என்றால் அது மிகையல்ல…
Discussion about this post