எந்த நடிகரை காதலனாக தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா கூறிய பதில் வைரலாகி வருகிறது.
கன்னடத்தில், “கிரிக் பார்ட்டி” படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கடந்த ஒரு வருட காலத்தில் கிடுகிடுவென முன்னணி நடிகையாக வளர்ந்து விட்டார். குறிப்பாக, தெலுங்கில் வெளியான “கீதா கோவிந்தம்” படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்ததன் மூலம் தெலுங்கு மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார். அதில், இடம் பெற்றிருந்த “இன்கேம் இன்கேம்” பாடலின் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமானார். விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த அந்த படம் பெரிய அளவுக்கு வெற்றி பெறவில்லை என்றாலும், தமிழகத்தின் பெரும்பாலான இளைஞர்கள் ராஷ்மிகாவுக்கு ரசிகர்களாயினர்.
அதே நேரம் இந்த படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் பெரிய அளவில் மார்க்கெட்டை கைப்பற்றினார் ராஷ்மிகா. இதனால் அவர் தெலுங்கு திரையுலகில் அதிகம் விரும்பப்படும் நடிகையாகியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மீண்டும் விஜய் தேவரகொண்டாவுடன் ‘டியர் கம்ரேட்’, மகேஷ் பாபுவுடன் ‘சரிலேரு நீக்கெவரு’ படத்தில் நடித்திருந்த ராஷ்மிகா, தமிழில் நடிப்பாரா? என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நடிகர் கார்த்தியை வைத்து பாக்யராஜ் கண்ணன் இயக்கும் “சுல்தான்” படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இதற்கிடையே, தமிழ் சினிமாவில் உச்சத்தில் உள்ள நடிகர் விஜய்யை வைத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எடுத்து வரும் “மாஸ்டர்” படத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், அந்த வாய்ப்பு திடீரென “பேட்ட” படத்தில் நடித்த மாளவிகா மோகனனுக்கு சென்றுவிட்டது.
தற்போது, தெலுங்கில் “பீஷ்மா” என்கிற படத்தில் நடித்துள்ள ராஷ்மிகா, அந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவரிடம் மூன்று கேள்விகள் எழுப்பப்பட்டது. முதலில், எந்த நடிகரை உங்களது நண்பராக ஏற்றுக் கொள்வீர்கள்? என்றும் எந்த நடிகரை காதலனாக தேர்வு செய்வீர்கள்? என்ற கேள்விகளுக்கு ராஷ்மிகா சுவாரஸ்யமான பதிலை கூறினார்.
முதலில், தெலுங்கு நடிகர் நித்தினை நண்பராகவும், இளைய தளபதி நடிகர் விஜய்யை காதலனாக தேர்வு செய்வதாகவும் கூறினார். அப்போது, எந்த நடிகர்களை உங்களது வருங்கால கணவராக கூறுவீர்கள்? என்ற கேள்விக்கு, தமிழ் நடிகரை திருமணம் செய்ய ஆசை என்று விருப்பம் தெரிவித்தார்.
Discussion about this post