சென்னையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பினர் மற்றம் கதிராமங்கலம் போராட்டக் குழுவினர், அவருக்கு நன்றி தெரிவித்தனர்.
டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பினர் மற்றும் கதிராமங்கலம் போராட்டக் குழுவினர், சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் அவரை சந்தித்து, தங்களின் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர். இந்நிகழ்வின் போது, உணவு பாதுகாப்புத் துறை அமைச்சர் காமராஜ் உடனிருந்தார்.
Discussion about this post