ஆவின் பால் ஒப்பந்த டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் என ஒன்று இல்லை எனவும், தவறுதலாக வேலை நிறுத்தம் செய்ததற்கு மன்னிப்பு கோருவதாகவும், ஆவின் பால் டேங்கர் லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 14 ஆம் தேதி இரவு முதல் ஆவின் பால் ஒப்பந்த டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்தனர். அன்று முதல் தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த லாரி உரிமையாளர்கள், நந்தனத்தில் உள்ள ஆவின் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய அவர்கள், தாங்கள் மேற்கொண்ட வேலை நிறுத்தத்திற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும், தங்களுக்கு நீட்டிப்பு செய்து வழங்கிய பணியை மீண்டும் வழங்க வேண்டி, ஆவின் மேலாண்மை இயக்குநரை சந்தித்து கடிதம் வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
Discussion about this post