சென்னையில், கணவனை இழந்து வாழும் பெண்ணிடம், திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி, 20 சவரன் நகை மற்றும் 1 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை திருடிச் சென்ற நபரை, காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை மாதவரத்தைச் சேர்ந்த, கணவனை இழந்து வாழும் ப்ரியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக் கூறிய ரமேஷ் என்ற நபர், அவரது வீட்டிலேயே தங்கியுள்ளார்.
இந்த நிலையில், தனது நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ்களை கொடுத்துவிட்டு வருவதாக பிரியாவிடம் கூறிவிட்டுச் சென்ற ரமேஷ், இரண்டு நாட்களாகியும் திரும்பவில்லை.
இதனால் சந்தேகமடைந்த ப்ரியா, தனது வீட்டின் பீரோவை திறந்து பார்த்தபோது, அதில் இருந்த 20 சவரன் நகைகளையும், 1 லட்சம் ரூபாய் பணத்தையும் காணாமல் அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து, கடந்த அக்டோபர் மாதம் 30 ம் தேதியன்று ப்ரியா அளித்த புகாரின் அடிப்படையில், மாதவரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ரமேஷை தேடி வந்தனர்.
இந்நிலையில், திருநின்றவூர் அருகே மறைந்திருந்த ரமேஷை கைது செய்த காவல்துறையினர், அவரிடமிருந்த 20 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவரை புழல் சிறையில் அடைத்தனர்.
Discussion about this post