கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, நோய் தொற்றுள்ள கரன்சி நோட்டுகளை அழிக்க சீன அரசு திட்டமிட்டுள்ளது.
=கோவிட்-19 என பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு சீனாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியது. சுமார் 72,000 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கரன்சி நோட்டுகளை அழிக்க சீன அரசு முடிவு செய்துள்ளது.
நுண் எச்சில் நீர் துகள்கள் படிந்த கரன்சி நோட்டுகள் மூலமாகமும் வைரஸ் பரவ வாய்ப்புள்ளதால் ஹூபெய் மாகாணத்தின் மருத்துவமனை, ஷாப்பிங் மால்கள், பேருந்துகள் போன்றவற்றில் வசூலான கரன்சி நோட்டுகளை சுத்தம் செய்ய சீன மத்திய வங்கி முடிவு செய்துள்ளது. இதன்படி, வைரஸ் தொற்று பாதிப்புள்ள பகுதியில் வங்கிக்கு வரும் நோட்டுகளை 14 நாட்கள் அல்ட்ரா வைலட் கதிர்கள் மற்றும் அதிக வெப்பத்தில் வைத்து நோட்டுகளை அழிக்க அனைத்து வங்கிக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Discussion about this post