குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது என சட்டப்பேரவைத் தலைவர் தனபால் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று, குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என ஸ்டாலின் உள்ளிட்டோர் வலியுறுத்தினர். இதற்கு பதிலளித்துப் பேசிய சபாநாயகர் தனபால், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்பில்லை என திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
வண்ணாரப் பேட்டை சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் பேசலாம் என்றும் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பேசக்கூடாது என உறுதிபடக் கூறினார்.
Discussion about this post