நாட்டின் ஏற்றுமதி கடந்த ஜனவரி மாதத்தில் 1.66 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளதாக மத்திய வர்த்தக துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டின் ஏற்றுமதி, ஜனவரி மாதத்தில், 1.66 சதவீதமாக குறைந்து 1 புள்ளி 84 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் நாட்டின் இறக்குமதியும் 0 புள்ளி 75 சதவீதம் சரிவை கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் மட்டும் 2 புள்ளி 92 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இறக்குமதி மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறுக்குமதி சரிவை சீர் செய்ய பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மத்திய வர்த்தக துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Discussion about this post