உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் நடந்த நிகழ்ச்சியில், கலந்து கொண்ட பிரதமர் மோடி, பாரம்பரிய மற்றும் மாற்றுத்திறனாளிகளின் கைவினை கண்காட்சியினை துவக்கி வைத்தார். மாற்றுத்திறனாளிகள் வடிவமைத்த பொருட்களை ஆர்வமுடன் பார்வையிட்ட அவர், பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.
பின்னர் பொது கூட்டத்தில் பேசிய அவர், உத்தரபிரதேசத்திலிருந்து தயாராகக்கூடிய பொருட்களை ஆன்லைன் வர்த்தகம் மூலம் சந்தைபடுத்த முயற்சித்தால் நாட்டிற்கு பலனளிக்கும் என்று கூறியுள்ளார்.
இந்த நிகழ்ச்சில், உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Discussion about this post