5 ட்ரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை நோக்கி இந்திய பொருளாதாரம் செல்லும் நிலையில், அதில் சுற்றுலாத்துறையும் முக்கிய பங்காற்றி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசம் மாநிலம் சந்தாவ்லியில் நடந்த நிகழ்ச்சியில், பங்கேற்ற பிரதமர் மோடி பண்டிட் தீனதயாள் உபாத்யாயாவின் சிலையை திறந்து வைத்தார். இதனையடுத்து உபாத்யாயாவின் நினைவு மண்டபத்தை திறந்து வைத்து பார்வையிட்ட அவர், வாரணாசி முதல் இந்தூர் வரையிலான காஷி மஹகல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை காணொளி காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதன்பின் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, இந்தியா தற்போது 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும், அதில், வர்த்தகம் மற்றும் சுற்றுலாத்துறை முக்கிய பங்காற்றி வருவதாக கூறினார்.
மேலும், குடியுரிமை சட்டம் என்பது நாட்டிற்கு அவசியமானது என்றும், அதிலிருந்து அரசு பின் வாங்காது என்றும் தெரிவித்தார்.
Discussion about this post