சீனாவில் வூகான் உட்பட பல்வேறு மாகாணத்தில் உள்ள 175 நேபாளர்களை அந்நாட்டு அரசு அழைத்து வந்துள்ளது
சீனாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், உலக நாடுகள் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம் காட்டி வருகிறது. வூகான் மாகாணத்தில் உள்ள இந்தியர்களை 2 விமானம் மூலம் அழைத்து வந்தது.
இந்நிலையில், வூகான் உட்பட பல்வேறு மாகாணத்திலுள்ள தங்கள் நாட்டை சேர்ந்த 175 பேரை அழைத்து வர ஏ-330 ரக விமானத்தை காட்மாண்டுவிலிருந்து நேபாள அரசு அனுப்பியது. மேலும், சீனாவிலுள்ள தூதரக அதிகாரிகள் மூலம் வூகான் மாகாணத்திலுள்ள நேபாள மக்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் 175 பேர் அழைத்து வரப்பட்டுள்ளதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது. வூகான் மாகாணத்தை சேர்ந்த 4 பேரை மட்டும் அங்கேயே தங்குமாறு அந்நாட்டு அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் 6 பேருக்கு மருத்துவ காரணமாக விமானத்தில் ஏற அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் தங்கள் நாட்டினரை திருப்பி அனுப்ப வழிமுறைகளை எளிதாக்கிய சீன அரசுக்கு நேபாள அரசு நன்றி தெரிவித்தது.
Discussion about this post