திருநெல்வேலி உட்பட 5 மாவட்ட அதிமுக கழக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம், ராயப்பேட்டையிலுள்ள தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெறுகிறது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வளர்ச்சிப் பணிகள் குறித்தும், தேர்தல் பணிகள் குறித்தும், அனைத்து மாவட்டங்களின் தலைமை கழக நிர்வாகிகள், செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர் பெருமக்கள் ஆகியோர் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம், அதிமுக தலைமைக் கழகத்தில் 12ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று பகல் 12 மணிக்கு நெல்லை மாநகர், நெல்லை புறநகர், காஞ்சிபுரம் கிழக்கு, காஞ்சிபுரம் மத்தியம், காஞ்சிபுரம் மேற்கு, வேலூர் கிழக்கு மற்றும் வேலூர் மேற்கு கழக நிர்வாகிகளுடனும், மாலை 5 மணிக்கு விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் தெற்கு, வடசென்னை கிழக்கு, வடசென்னை மேற்கு, வடசென்னை தெற்கு, தென்சென்னை வடக்கு மற்றும் தென் சென்னை தெற்கு கழக நிர்வாகிகளுடனும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
Discussion about this post