2020-21ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு 11,894 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண்மை மண்டலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளது, தமிழக அரசு வேளாண்துறைக்கு அளித்துவரும் முக்கியத்துவத்தை காட்டுவதாக நிதிநிலை அறிக்கையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 2020-21ம் நிதியாண்டில், கரும்பு விவசாயிகள் நுண்ணீர்ப் பாசனம் மேற்கொள்வதை ஊக்குவிக்க 68 கோடியே 35 லட்சம் ரூபாய் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும், 75 கோடி ரூபாய் கூடுதல் நிதியுடன் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயிரத்து 844 கோடியே 97 லட்சம் ரூபாய் செலவில் 7 லட்சத்து 41 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் நுண்ணீர்ப் பாசன வசதி பெறும் வகையில் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தோட்டக்கலைப் பயிர் சாகுபடிப் பரப்பை அதிகரிக்க 325 மெட்ரிக் டன் காய்கறி விதைகள் வழங்கப்படும் என்றும், 200 கோடி ரூபாய் மதிப்பில், 350 வேளாண் இயந்திர வாடகை மையங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதம மந்திரி கிசான் சம்பதா யோஜனா திட்டத்தின் கீழ் 218 கோடி ரூபாயில், சேலம், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் மேலும் 8 வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள் நிறுவிட உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தருமபுரி, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 70 கோடி ரூபாய் மதிப்பில் உணவுப் பூங்காக்கள் அமைக்கப்படும் போன்ற பல்வேறு அறிவிப்புகள் வேளாண் துறையில் இடம்பெற்றுள்ளன.
Discussion about this post