2020 – 21ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். ஒ.பன்னீர்செல்வம் 10 வது முறையாக தாக்கல் தாக்கல்செய்துள்ள இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்ன ?
சேலம் மாவட்டத்தில் 4.50 கோடி ரூபாய் மதிப்பில் புதிய தொழிற்பேட்டை உருவாக்கப்படும் என்றும், திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டானில் 77.94 கோடி ரூபாய் மதிப்பில் மாபெரும் உணவுப்பூங்கா அமைக்கப்படும் எனவும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பில் 11 புதிய மருத்துவக்கல்லூரிகள் தொடங்கப்படும் என்றும், புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் பெருந்திட்ட வளாகம் அமைக்க 550 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் எனவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. வேளாண்துறைக்கு 11 ஆயிரத்து 894 கோடி ரூபாயும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், நிர்பயா திட்டத்தின் கீழ் அரசுப்பேருந்துகளில் 75.02 கோடி ரூபாய் மதிப்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் எனவும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு ஆகஸ்ட் மாதத்துக்குள் வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்படும் எனவும் பட்ஜெட் உரையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
Discussion about this post