நீலகிரி வனப்பகுதியில் வனவிலங்குகள் குறித்து கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது.
மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் 55 சதவீதம் வனப்பகுதி உள்ளது. இங்கு வனவிலங்கு கணக்கெடுக்கும் பணி 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. புலி, சிறுத்தை, கரடி, மான்கள், மலபார் அனில் உள்ளிட்ட வனவிலங்குகளை கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. நீலகிரி வனக் கோட்டத்தில் காட்டெருமைகள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், முதல்முறையாக அவற்றின் எண்ணிக்கையை கண்டறியும் வகையில் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கணக்கெடுப்பில் 200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் வனஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Discussion about this post