ராஜீவ் காந்தி கொலை வழக்கில், சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் படி, தமிழக அமைச்சரவை கடந்த 2018ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. தமிழக அமைச்சரவையின் இந்த தீர்மானத்தின் மீது ஆளுநர் இதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்காத நிலையில், கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி, தமிழக அமைச்சரவையின் முடிவின் படி தான் விடுதலை செய்யப்பட்டிருக்க வேண்டுமென்றும், தன்னை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி விடுவிக்க வேண்டுமென்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நளினி மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.
Rajiv Gandhi assassination case: The government of Tamil Naduஅப்போது அரசு தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன், தமிழக அமைச்சரவையின் தீர்மானம் உத்தரவாக கருத முடியாது என்றும், பரிந்துரையாக மட்டுமே கருத முடியும் என்றும் வாதிட்டார். மேலும், சிபிஐ தொடர்புடைய இந்த வழக்கில், மாநில அரசு தன்னிச்சையாக உத்தரவு பிறப்பிக்க அதிகாரம் இல்லை எனவும் அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இந்நிலையில், அமைச்சரவையின் தீர்மானத்தின் பிறகு, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறையில் இருப்பது சட்டவிரோத காவல் என கருத்தில் கொள்வது குறித்து தமிழக அரசு பதிலளிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கின் விசாரணை வரும் 18ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
Discussion about this post