டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 42 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், எஞ்சியவர்களை பிடிக்க சிபிசிஐடி போலீசார் தீவிரமாக செயல்பட்டு வருவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
13 பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரத்து 937 மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ராணி மெய்யம்மை மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், 7 பேர் விடுதலை தொடர்பாக உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி, விரைந்து முடிவெடிக்க ஆளுநருக்கு தமிழக அரசின் சார்பில் தொடர்ந்து அழுத்தம் தரப்படும் எனக் கூறினார்.
Discussion about this post