அமெரிக்காவில் வசித்துவரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன் காதலியிடம் அனைவரும் வியக்கும் வண்ணம் காதலை சொல்லி அசத்தியுள்ளார்.
நியூயார்க்கை சேர்ந்த இந்திய வம்சாவளி இளைஞர் சியாம் ஷாவும்,மும்பையில் பணிபுரியும் சிவானி பாப்னாவும் ஒன்றரை ஆண்டுகளாக நண்பர்களாக பழகி வந்தனர். இந்நிலையில் சிவானியிடம் காதல் வயப்பட்ட ஷியாம் தன் காதலை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்தினார். அதன்படி சிவானியையும் அவரது குடும்பத்தினரையும் பாரிசுக்கு வரவழைத்த அவர் அங்கு தோழர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் காதலை வெளிப்படுத்தினார். ஹிந்தி பட பாடல்களுக்கு நடனமாடியபடி அவர் காதலை வெளிப்படுத்தினார். சியாம் ஷா காதலை தெரிவித்த முழு வீடியோவும் பதிவு செய்யப்பட்டு இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பல்வேறு தரப்பினரும் காதல் ஜோடிகளுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Discussion about this post