ரஷ்யாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டது போல் நடித்து பொதுமக்களை பயமுறுத்திய நபர் சிறையில் அடைக்கப்பட்டார்.
சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு இதுவரை 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் உலகம் முழுவதும் பரவி வரும் இந்த நோயை கட்டுப்படுத்த தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ரஷ்யாவில் ஹரொமேட் டஸ்ரோவ் என்ற இளைஞர் சமூக வலைத்தளங்களில் வித்தியாசமாக எதையாவது செய்ய வேண்டும் என நினைத்து கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அணியும் முகமூடியை அணிந்துகொண்டு ரயிலில் பயணித்துள்ளார். அவரது நண்பர்கள் இதனை வீடியோவாக பதிவு செய்து வந்துள்ளனர்.
ரயில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அவர் திடீரென வலிப்பு வருவது போல மயங்கி விழுந்து நடித்துள்ளார். உடனடியாக அவரது நண்பர்கள் ‘கொரோனா வைரஸ், கொரோனா வைரஸ்’ என கூச்சலிட்டவும் சக பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். தங்களுக்கும் நோய் தொற்று ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் அலறிடித்து ரயிலை விட்டு வெளியேறினர்.
இதுகுறித்து காவல்துறையினர் விசாரிக்கையில் இது ‘பிராங் வீடியோ’ என தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து ஹரொமேட் டஸ்ரோவ்-ஐ கைது செய்யப்பட்டார். அவரை ஒரு மாதங்கள் சிறையில் அடைக்க ரஷ்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. டஸ்ரோவ்வுக்கு அதிகப்பட்சமாக 5 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post