அதிமுக மாவட்ட கழக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் நடக்கிறது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வளர்ச்சிப் பணிகள் குறித்தும், தேர்தல் பணிகள் குறித்தும், அனைத்து மாவட்டங்களின் தலைமை கழக நிர்வாகிகள், செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர் பெருமக்கள் ஆகியோர் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம், அதிமுக தலைமைக் கழகத்தில் இன்று முதல் 13ம் தேதி வரை, காலை, மாலை என இரு வேளைகளில் நடைபெறுகிறது. கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. தினமும் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலும், மாலை 4:30 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் மாவட்ட வாரியாக ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
அதன்படி, இன்று காலை 10 மணிக்கு கரூர், தஞ்சாவூர் வடக்கு, தஞ்சாவூர் தெற்கு, நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் பெரம்பலூர் கழக நிர்வாகிகளுடனும், மாலை 4:30 மணிக்கு மதுரை, மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு, திண்டுக்கல், விருதுநகர், திருச்சி மாநகர் மற்றும் புறநகர் கழக நிர்வாகிகளுடனும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
11ம் தேதி காலை 10 மணிக்கு திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு, நீலகிரி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி வடக்கு மற்றும் தூத்துக்குடி தெற்கு கழக நிர்வாகிகளுடனும், மாலை 4:30 மணிக்கு கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு, கடலூர் கிழக்கு, கடலூர் மத்தியம், கடலூர் மேற்கு, திருவள்ளூர் கிழக்கு மற்றும் திருவள்ளூர் மேற்கு கழக நிர்வாகிகளுடனும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
12ம் தேதி காலை 10 மணிக்கு தேனி, அரியலூர், தருமபுரி, கோவை மாநகர், கோவை புறநகர், திருப்பூர் மாநகர் மற்றும் திருப்பூர் புறநகர் கழக நிர்வாகிகளுடனும், மாலை 4:30 மணிக்கு சேலம் மாநகர், சேலம் புறநகர், நாமக்கல், கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மேற்கு, ஈரோடு மாநகர் மற்றும் ஈரோடு புறநகர் கழக நிர்வாகிகளுடனும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
13ம் தேதி காலை 10 மணிக்கு நெல்லை மாநகர், நெல்லை புறநகர், காஞ்சிபுரம் கிழக்கு, காஞ்சிபுரம் மத்தியம், காஞ்சிபுரம் மேற்கு, வேலூர் கிழக்கு மற்றும் வேலூர் மேற்கு கழக நிர்வாகிகளுடனும், மாலை 4:30 மணிக்கு விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் தெற்கு, வடசென்னை கிழக்கு, வடசென்னை மேற்கு, வடசென்னை தெற்கு, தென்சென்னை வடக்கு மற்றும் தென் சென்னை தெற்கு கழக நிர்வாகிகளுடனும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
Discussion about this post