நாமக்கல்லில் மக்கள் நடமாட்ட அதிகம் உள்ள சாலை சந்திப்பில், நாட்டு வெடிகளை தோரணம் கட்டி வெடித்த திமுகவின் அத்துமீறலால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நாமக்கல்லின் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக ராஜேஷ்குமார் என்பவர் சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில் அவரை வரவேற்கும் விதமாக, திமுகவினர் நெரிசல் மிக்க சாலையான, மோகனூர்-பரமத்தி சாலை சந்திப்பில் நாட்டு வெடிகளை தோரணமாக கட்டி வெடிக்கச் செய்தனர். அதிக ஒலி எழுப்பக் கூடிய வெடிகளை, போக்குவரத்து நெரிசல் மிகுந்த பிரதான சாலையின் நடுவே நீண்ட நேரம் வெடிக்கச் செய்ததால், அவ்வழியே செல்ல வேண்டிய வாகனங்கள் ஒரு மணி நேரம் தாமதமாக சென்றனர்.
Discussion about this post