அசாம் மாநிலத்தில் போடோ பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்காக ஆயிரத்து 500 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
அசாம் மாநிலத்தின் போடோ இயக்கம் மற்றும் மத்திய அரசு இடையே சமீபத்தில் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் போடோ ஒப்பந்தம் கையெழுத்தானதை கொண்டாடும் வகையில், அசாம் மாநிலம் கொராஜ்ஹர் பகுதியில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விழாவின் ஒருபகுதியாக நடைபெற்ற பாரம்பரிய கலைநிகழ்ச்சியை பிரதமர் மோடி கண்டுகளித்தார்.
Discussion about this post