மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் கொலை மற்றும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 26 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
விழுப்புரத்தில் பெட்ரோல் பங்க் மேலாளர் ஒருவர் குண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு குறித்து விழுப்புரம் காவல் துணை கண்காணிப்பாளர் சங்கர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 26 பேரை காவல்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளதுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம், அவர்கள் தொடர்புடைய வழக்குகள் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து, அவர்கள் அனைவரும் திருந்தி வாழ்வதாக காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். குண்டு வீசி கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையின் போது, இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இனி,இது போன்று குற்றச்செயலில் ஈடுப்பட கூடாது என்று அறிவுறுத்தி இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக காவல் துணை கண்காணிப்பாளர் சங்கர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post