கடந்த 70 ஆண்டுகளில் நாட்டின் நன்மைக்காக எதிர்க்கட்சி எதையும் செய்யவில்லை என பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். கடந்த 70 ஆண்டுகளில் நாட்டின் நன்மைக்காக எதிர்க்கட்சி எதையும் செய்யவில்லை என பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.
மக்களவையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பதில் அளித்து பேசிய அவர், 70 ஆண்டுகளில் எதிர்க்கட்சி மோசமான சாதனையை மட்டுமே படைத்துள்ளதாக விமர்சித்தார். பழைய விதிகளையே நாம் பின்பற்றியிருந்தால் அயோத்தி விவகாரத்துக்கு தீர்வு கண்டிருக்க முடியாது என்றும், கர்தார்பூர் சாஹிப் வழித்தடம் உருவாகியிருக்காது எனவும் கூறினார். புதிய வழிமுறைகளை பின்பற்றியதால்தான், ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதாகவும், இஸ்லாமிய பெண்களுக்கு உரிமை கிடைத்தது எனவும் குறிப்பிட்டார். பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உரை, புதிய உத்வேகத்தை அளித்துள்ளதாக பிரதமர் மோடி கூறினார். முத்ரா, ஸ்டார்ட்அப் போன்ற திட்டங்கள் வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டங்கள் என பெருமிதம் தெரிவித்த அவர், முத்ரா திட்டத்தின் மூலம் நாட்டின் 70 சதவீத பெண்கள் கடனுதவி பெறுவதாகவும் கூறினார். மக்களின் நலனுக்காக மத்திய அரசு அதிவேகத்தில் பணியாற்றுவதாகவும், உள்கட்டமைப்பு வளர்ச்சியில் புதிய உத்வேகத்தை முன்னெடுத்துள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
Discussion about this post