தமிழக கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள சுமார் 10 ஆயிரம் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என கூட்டுறவு துறை அஅமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கூட்டுறவு துறையின் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் செல்லூர் ராஜூ, மாவட்டத்திலுள்ள கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், இந்த நிதியாண்டில் வட்டியில்லா பயிர் கடன் 10 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார் என்றும், இதுவரை 10 லட்சத்து 5 ஆயிரம் பேருக்கு 7 ஆயிரத்து 200 கோடி ரூபாய் வட்டியில்லா பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். கடந்த ஆண்டை காட்டிலும் ஆயிரத்து 200 கோடி ரூபாய் கூடுதலாக வழங்கி சாதனை படைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
Discussion about this post