அமெரிக்கா பிரதிநிதிகள் சபையின் ஜனநாயக கட்சி பேச்சாளர் நான்சி பெலோசி, டிரம்ப் உரையாற்றிய நகலை கிழித்த சம்பவம் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் அதிபர் டிரம்ப் 3ஆவது முறையாக உரையாற்றினார். வாஷிங்டனில் உள்ள கேபிட்டல் கட்டடத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அதிபர் டிரம்ப் சுமார் ஒரு மணிநேரம் 18 நிமிடங்கள் பேசினார். டிரம்ப் உரையாற்றும் போது சபையின் ஜனநாயக கட்சி பேச்சாளர் நான்சி பெலோசி, அவருக்கு பின்னர் அமர்ந்திருந்தார். உரையை தொடங்குவதற்கு முன்பு பெலோசியுடன் டிரம்ப் கை குலுக்க மறுத்தார். இதனால் டிரம்ப் உரையாற்றி முடித்ததும், டிரம்ப் பேச்சின் நகலை நான்சி பெலோசி கிழித்தார். இந்த சம்பவம் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. குடியரசு கட்சியினர் நான்சியின் செயலை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
Discussion about this post