குரூப் 2 ஏ தேர்வில், முறைகேடு செய்த மேலும் 4 குற்றவாளிகளை கைது செய்த குற்றப்பிரிவு புலனாய்வுத்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த குரூப் 2 ஏ தேர்வில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தேர்வு மையத்தில், தேர்வு எழுதிய 42 பேர் முறைகேட்டில் ஈடுபட்டதாக தமிழ்நாடு அரசு தேர்வு பணியாளர் தேர்வானையம் புகார் அளித்தது. இதுவரை குரூப் 2 ஏ தேர்வில், முறைகேட்டில் ஈடுபட்டதாக 9 பேரும், குரூப் 4 தேர்வில், முறைகேட்டில் ஈடுபட்ட 16 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்று பல்வேறு அரசு துறைகளில் பணிபுரியும் தீபக், வினோத்குமார், அருண்பாலாஜி மற்றும் தேவி ஆகியோர் முக்கிய குற்றவாளியான ஜெயக்குமாரிடம் 43 லட்ச ரூபாய் பணம்கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்டு தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனையடுத்து 4 பேரும் கைது செய்யப்பட்ட நிலையில், குற்றப்பிரிவு புலனாய்வுத்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Discussion about this post