கேரள மாநிலத்தில் மேலும் ஒரு நபர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகி உள்ளது.
சீனாவின் உஹான் மாகாணத்தில் இருந்து அண்மையில் கேரளாவுக்கு வந்த இளம்பெண்ணுக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இதேபோல் மற்றொரு நபருக்கும் கொரோனா வைரஸ் காய்ச்சல் இருந்தது கண்டறியப்பட்டது.
இந்நிலையில், மூன்றாவதாக கஞ்சங்காடு பகுதியை சேர்ந்த நபர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த நபர் சீனாவின் உஹான் மாகாணத்தில் இருந்து வந்தவர் என்றும், தற்போது காசர்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைஷலஜா தெரிவித்துள்ளார்.
Discussion about this post