காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் அளவு குறைந்ததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து 2வது நாளாக 115 கன அடியாக நீடித்து வருகிறது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் அளவு குறைந்ததால், கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவும் குறைந்துள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து இரண்டாவது நாளாக 115 கன அடியாக நீடித்து வருகிறது. காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 107 புள்ளி 12 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 74 புள்ளி 376 டி.எம்.சியாகவும் உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு ஆயிரத்து 250 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
Discussion about this post