தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு மூன்றாம் கால யாக பூஜை தொடங்கியது.
தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கு விழா நாளை மறுதினம் நடைபெறுகிறது. குடமுழுக்கு விழாவையொட்டி, தமிழக தொல்லியல் துறை மற்றும் இந்து சமய அறநிலைத்துறை சார்பாக, பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குடமுழுக்கு விழா 23 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுவதால், விழாவிற்கு10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, தஞ்சை பெரிய கோவில் அருகே அமைக்கப்பட்டுள்ள 22 ஆயிரம் சதுரடி பரப்பளவிள்ள யாக சாலையில் 400க்கும் மேற்பட்ட சிவாச்சாரியர்கள் மூன்றாம் கால யாக சாலை பூஜையை தொடங்கியுள்ளனர்.
பூஜையில் 108 மூலிகை பொடிகளை கொண்டு யாகங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து நான்காம் கால யாகசாலை பூஜை நடைபெற இருக்கிறது. குடமுழுக்கு விழா முன்னிட்டு, தஞ்சை பெரிய கோவிலில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Discussion about this post