கொரோனா வைரஸால் சீனாவில் 360 பேர் பலியான நிலையில், வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்காக 8 நாட்களில் கட்டப்பட்ட மருத்துவமனையில், இன்று முதல் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் காரணமாக அந்நாட்டில் பலியானோர் எண்ணிகை 304 ஆக இருந்தது. தற்போது மேலும், 56 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 360 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 14 ஆயிரத்து 380 பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அதில், 2 ஆயிரத்து 103 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸுக்கு பிலிப்பைன்ஸில் ஒருவர் இறந்திருப்பது, சீனாவுக்கு வெளியே நிகழ்ந்த முதல் உயிரிழப்பாகும். இந்நிலையில், சீனாவைத் தவிர மற்ற நாடுகளில் கொரோனா வைரஸால் 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
இதில், இந்தியாவில் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்காக 8 நாட்களில் ஒரு மருத்துவமனையை சீனா கட்டியெழுப்பியுள்ளது. இன்று முதல் இந்த மருத்துவனமையில், வைரஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. ஆயிரம் படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்ட இந்த மருத்துவமனையில், நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தொடர்ந்து 14 நாட்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட உள்ளனர்.
Discussion about this post