5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஆதரிப்பதாக தேசிய ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தேசிய ஆசிரியர் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் கந்தசாமி, இத்தேர்வின் மூலம் கற்றல் திறம் மென்மேலும் அதிகரிக்கும் என கூறினார். மேலும், ஹிந்தி மொழி, யோகா, கராத்தே போன்றவைகளை மாணவர்களின் விருப்பத்திறக்கு எற்ப கற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
Discussion about this post