சீனாவிலிருந்து கேரளா வந்தடைந்த மற்றொரு நபருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சீனாவை உலுக்கி வரும் கொரோனா வைரஸால் நாளுக்கு நாள் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சீனாவிலிருந்து கேரளா வந்த திருச்சூரை சேர்ந்த இளம் பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தாக்கப்பட்டதை அடுத்து, அப்பெண் மருத்துவ முகாமில் தனி அறையில் பாதுகாப்பு கவசங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், கேரளாவில் மீண்டும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கப்பட்டுள்ளது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து கேரளா வந்தடைந்த அப்பெண்ணும் மருத்துவ முகாமில் தனியாக தங்கவைக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
Discussion about this post