இரண்டாம் நஞ்சை சாகுபடிக்காக கோபிசெட்டிப்பாளையம் கொடிவேரி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட, உத்தரவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பளையம் அருகேயுள்ள கொடிவேரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட் என்ற இரண்டு வாய்க்கால்கள் மூலம் 24 ஆயிரத்து 504 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. முதல்போக சாகுபடிக்கு ஏற்கனவே தண்ணீர் திறந்துவிட்டப்பட நிலையில் தற்போது 2ம் போக நெல் சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விட வேண்டும் என முதலமைச்சருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனை ஏற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தடப்பள்ளி அரக்கன்கோட்டை வாய்க்காலில் இரண்டாம்போக நெல் சாகுபடிக்காக இன்று முதல் மே மாதம் 31ம் தேதி வரை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடும்படி உத்தரவிட்டிருந்தார். அதன்படி, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தண்ணீரை திறந்துவிட்டனர்.
இதன் மூலம், கோபிச்செட்டிபாளையம், பவானி மற்றும் அந்தியூர் ஆகிய 3 பகுதிகளிலுள்ள 24 ஆயிரத்து 504 ஏக்கர் நிலங்களும், மறைமுகமாக 20 ஆயிரம் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறுகிறது. மக்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக தண்ணீர் திறந்து விட்ட முதலமைச்சருக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.
Discussion about this post