சைக்கோ படத்தில் சில கெட்ட வார்த்தைகளை அர்த்தம் தெரியாமலே பேசினேன் என்று நித்யா மேனன் கூறியுள்ளார்.
மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி, நித்யா மேனன், அத்தி ராவ் நடிப்பில் சைக்கோ படம் ஜனவரி 24 ஆம் தேதி வெளியானது.இந்த படத்தில் உதயநிதி பார்வையற்றவராக நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் காதல் கதைக்கு எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கிறதோ, அதே அளவிற்கு வித்தியாசமான த்ரில்லர் கதைக்கும் வரவேற்பு உள்ளது.அந்த வகையில் சைக்கோ படத்திற்கு கிடைத்த வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சைக்கோ படக்குழுவினர் விழா நடத்தினர்.அப்போது பேசிய நித்யா மேனன், ’மிஷ்கின் நேர்மையான இயக்குநர்.இதுபோன்ற இயக்குநர்களின் கதையில் நடிப்பது எனக்கு உற்சாகத்தை கொடுக்கும்.இந்த படம் வெற்றிப்படமாக அமைந்ததால் மகிழ்ச்சி அடைகிறேன்.படத்தில் எனது கதாபாத்திரம் பிடித்தது என்றாலும் , சில கெட்ட வார்த்தைகளை பேச வேண்டியிருந்தது.பேசுவதற்கு கொஞ்சம் தயக்கம் இருந்தது.ஆனாலும் பல வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாமலேயே பேசினேன்’ என்று கூறினார்.
Discussion about this post