ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தூத்துக்குடி திருநெல்வேலி ஆகிய இரண்டு மாவட்டங்களில் முதற்கட்டமாக இன்று நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமாராஜ் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட 10 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட உணவுத்துறை அமைச்சர் காமராஜ் 1,768 மாணவ, மாணவிகளுக்கு 70,88,000 ரூபாய் மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தூத்துக்குடி திருநெல்வேலி ஆகிய இரண்டு மாவட்டங்களில் முதற்கட்டமாக இன்று நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக கூறியுள்ளார். இதனால் தமிழகத்துக்கு உட்பட்டவர்கள் மட்டுமே எந்த இடத்தில் வேண்டுமானாலும் உணவுப் பொருட்களை பெற்றுக் கொள்ள நடைமுறையில் வர உள்ளதாக தெரிவித்துள்ளார்.
Discussion about this post