நிர்பயா வழக்கில், குற்றவாளிகள் 4 பேருக்கு நிறைவேற்றப்படவிருந்த தூக்கு தண்டனையை மீண்டும் ஒத்திவைத்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங், பவன் குப்தா, வினய் குமார் சர்மா, அக் ஷய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கும் நாளை தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவிருந்தது. அவர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்களும், குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. (GFX In) தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. குற்றவாளிகள் அடுத்தடுத்து புதிய மனுக்களை தாக்கல் செய்து தண்டனையை நிறைவேற்ற விடாமல் தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில், தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு இடைக்கால தடை விதிக்கக்கோரி, குற்றவாளிகள் தரப்பில் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு விசாரணைக்குவந்தபோது, நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு, நாளை நிறைவேற்றப்படவிருந்த தூக்கு தண்டனையை 2வது முறையாக டெல்லி நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை தூக்கு தண்டனையை நிறைவேற்றக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது.((GFx Out))
Discussion about this post