தமிழகம் முழுவதும் உள்ள அணைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, 8 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 120 அணைகளின் தரத்தை உறுதி செய்யவும், அணைகளின் மதகுகள் மற்றும் கரைகளை ஆய்வு செய்து அணைகளை மேம்படுத்த தமிழக அரசு ஏற்கனவே 6 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்து உத்தரவிட்டிருந்தது.
இந்தக் குழு பருவமழை காலங்களில் அணைகளை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளித்து வருகிறது. அணைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ள நிலையில் 6 பேர் கொண்ட குழுவால் அணைகளின் பாதுகாப்பை நேரில் ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை வழங்க சிரமம் ஏற்பட்டது.
இதையடுத்து, கூடுதலாக 8 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி உறுப்பினர் நரேஷ்குமார் மாத்துர் தலைமையிலான குழுவில், மத்திய நீர்வள ஆணைய இயக்குநர் விவேல் திரிபாதி, பொதுப்பணித்துறையில் ஓய்வு பெற்ற அதிகாரிகள் உள்ளிட்ட 8 பேர் உள்ளனர். இந்த குழுவை அமைத்து பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் மணிவாசன் உத்தரவிட்டுள்ளார்.
Discussion about this post