சென்னை ஆவடியில் ராணுவ கனரக வாகன தொழிற்சாலையில் காவலர் ஒருவரை சக காவலர் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆவடியில் இயங்கி வரும் ராணுவ பாதுகாப்புத் துறையை சார்ந்த கனரக வாகன தொழிற்சாலையில் இமாச்சலபிரதேசத்தை சேர்ந்த கிரிஜேஷ் குமார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.இன்று காலை பணி முடிந்து, அடுத்த ஷிப்டுக்கு வந்த திரிபுரா மாநிலத்தை சேர்ந்த நிலம்பர் சின்ஹாவுக்கும் கிரிஜேஷ் குமாருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. மோதல் முற்றிய நிலையில் சின்ஹா துப்பாக்கியால் சுட்டதில் கிரிஜேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பணி சுமை மற்றும் தூக்கமின்மை காரணமாக சின்ஹா மனஅழுத்தத்தில் இருந்ததால் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Discussion about this post