புதுக்கோட்டை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கட்டப்பட்டுள்ள கூடுதல் விரிவுரை அரங்கம் மற்றும் ஆய்வகங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான் மலையில், வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 10 கோடி ரூபாய் மதிப்பில் கூடுதல் விரிவுரை அரங்கம் மற்றும் ஆய்வகங்கள் கட்டப்பட்டன.
இதனை தலைமைச் செயலகத்திலிருந்து, காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இதேபோல், பல்வேறு பகுதிகளில் 89 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட வேளாண்மைத்துறை கட்டடங்களையும் அவர் திறந்து வைத்தார்.
இதனையடுத்து, சிறப்பான செயல்பாடுகளுக்காக வழங்கப்பட்ட 4 ஸ்காச் வெள்ளி விருதுகளையும், வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு முதலமைச்சர் பழனிசாமியிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
Discussion about this post