அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சும் என்பதை நிரூபிக்கும் விதமாக கேக் சாப்பிடும் போட்டியில் கலந்துக் கொண்ட பெண் ஒருவர் அதிக அளவில் கேக் சாப்பிட்டதால் முச்சு திணறி உயிரிழந்துள்ளார்.
கேக் என்றால் யாருக்குதான் பிடிக்காது. இருப்பினும் அளவுக்கு மேல் சென்றால் கேக் பிரியருகளுக்கே சாப்பிட சாப்பிட திகட்ட ஆரமித்துவிடும். அதைதான் பழக பழக பாலும் புளிக்கும் என்பார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அதனை மூச்சு முட்ட சாப்பிடும் போது விளையக்கூடிய நிகழ்வுதான் மரணம்.
ஆம் அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சும் என்று பழமொழி உண்டு அந்த பழமொழியை நிரூபிக்கும் விதமாக அஸ்திரேலியாவில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தேசிய தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி குயின்லாந்து மாகாணத்தின் ஹெர்பிபே நகரில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் ஆஸ்திரேலியாவின் பாரம்பரிய உணவுப் பொருளான லாமிங்டோன் எனப்படும் கேக் சாப்பிடும் போட்டி நடத்தப்பட்டது.
இதில் ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அவர்கள் போட்டிப் போட்டுக்கொண்டு கேக்குளை அள்ளி சாப்பிட்டனர். அப்போது போட்டியில் கலந்து கொண்ட 60 வயது பெண் ஒருவருக்கு திடீரென தொண்டையில் கேக் சிக்கியது.
அதனை தொடர்ந்து மூச்சு திணறல் ஏற்பட்டு அவர் மயங்கினார். உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சும் என்பதை இந்த சம்பவம் நிரூபித்து விட்டது.
Discussion about this post