குடியரசு தின விழா நிறைவு பெற்றதையொட்டி, முப்படை வீரர்களும் பாசறை திரும்பும் அற்புத நிகழ்ச்சி டெல்லியில் விமரிசையாக நடைபெற்றது. கடந்த 26 ஆம் தேதி குடியரசு தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற்றது. குடியரசு தின நிறைவு நாளான இன்று முப்படை வீரர்களும் பாசறை திரும்பும் நிகழ்வு நடைபெற்றது. இதையொட்டி, கண்கவர் அணிவகுப்பை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கண்டு ரசித்தனர்.
Discussion about this post