நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முதலில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளையும் வென்ற இந்திய அணி, தொடரில், 2 க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில், இரு அணிகளும் மோதும் மூன்றாவது டி20 போட்டி ஹாமில்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணி களமிறங்கி விளையாடி வருகிறது.
Discussion about this post